• ரஜினியுடன் மோதப் போகும் அஜித், சிம்பு



    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான், விஷ்ணுவர்தனின் அஜீத் படம் மற்றும் சிம்புவின் வாலு ஆகிய படங்கள் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகின்றன என்று கூறப்படுகிறது.
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு வரும் படம் கோச்சடையான்.
    ஏற்கனவே மக்களிடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோச்சடையானைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஜப்பானிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவிருக்கிறதாம்.

    இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினிகாந்தின் மனம் கவர்ந்த அஜீத் குமார் விஷ்ணுவர்த்தனின் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோருடன் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படமும் தீபாவளி அன்றே ரிலீஸ் ஆகிறது.

    அடுத்ததாக நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் சிம்புவின் வாலு படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகிறது. ஆக தீபாவளி அன்று 3 படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப்போகிறது.

    ரஜினி, அஜீத், சிம்புவுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால் ரஜினியின் ரசிகர்கள் தற்போது அஜீத்தின் ரசிகர்களாகவும் உள்ளனர். அஜீத்தின் ரசிகர்களில் பலர் சிம்புவின் ரசிகர்களாக உள்ளனர்.

0 comments:

Post a Comment