• மாதவன் மாதிரி கணவன் வேண்டும் : பிபாஷா பாசு!



    தனக்கு வரும் கணவர், நடிகர் மாதவனை போன்று இருக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கூறியிருக்கிறார்.
    பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நடிகை பிபாஷா பாசுவும் ஒருவர். இவரும் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிராஹாமும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர். ஜான் ஆபிரஹாமும் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது பிபாஷா பாசு, மாதவனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சூட்டிங் ஸ்பாட்டில் மாதவனின் பேச்சு, சிரிப்பு, பழகும் விதம் உள்ளிட்ட அவரின் குணாதிசயங்கள் பிபாஷா பாசுவுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். இதனால் அவரை போன்றே தனக்கு ஒருவர் கணவராக வர வேண்டும் என்று எண்ணுகிறார். இதுகுறித்து பிபாஷா பாசு கூ‌றுகையில்,  மாதவன் ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவர், பழகுவதற்கும் இனிமையானவர். அதனால் அவரைப்போன்று ஒருவர் என்னுடைய கணவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment