• வெற்றிமாறன் படத்தில் சித்தார்த்!




    தனுஷ் நடிக்க 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' என இரண்டு படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தயாநிதி அழகிரி தயாரிக்க, 'வடசென்னை' என்னும் படத்தினை இயக்க இருக்கிறார். சிம்பு இப்படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.




    வடசென்னை படத்தினை இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒரு படத்தினை தயாரிக்க இருக்கிறார் வெற்றிமாறன். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 'GRASS ROOT FILM COMPANY' என பெயரிட்டு இருக்கிறார்.


    தன்னுடைய உதவி இயக்குனரான மணி என்பவரை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்த இருக்கிறார்.


    அப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்திற்கு 'தேசிய நெடுஞ்சாலை' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். 


    'தேசிய நெடுஞ்சாலை' படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம் ஆகிய பொறுப்புகளை வெற்றிமாறன் ஏற்கிறார். மணி இயக்குகிறார்.

0 comments:

Post a Comment