தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படயுலகில் ரசிகர்களிடையே, தனக்கென நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. போனி கபூருடனான திருமணத்துக்குப் பிறகு முதல்முறையாக மீண்டும் திரையில் அழகு புயலாக காட்சியளிக்க வருகிறார்.
டைரக்டர் பால்கியின் மனைவி கௌவுரி ஷிண்டே இயக்கும் புதிய படமான “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் டப் செய்து ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்ய போகிறார்கள். இதை முழுக்க, முழுக்க காமெடியை மையமாக வைத்து படமாக்குகிறார்கள்.
படத்தின் கதைப்படி நடிகை ஸ்ரீதேவி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக வருகிறார். தனது அரை, குறையான ஆங்கிலத்தை வைத்து கொண்டு, சூழ்நிலை காரணமாக நியூயார்க் செல்கிறார். அங்கே இருப்பவர்கள் இவரது ஆங்கிலத்தை கிண்டல் செய்கின்றனர். இதனை ஒரு சவாலாக எடுத்து கொண்டு, முறைப்படி ஆங்கிலம் கற்று அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறார் என்று போகிறது படத்தின் கதை.
இதற்காக முறைப்படி பயிற்சியாளர் ஒருவரிடம் ஆங்கிலம் கற்றுவருகிறார் ஸ்ரீதேவி. மேலும் இந்த படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ‘அமிதாப் பச்சன்’ கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரெஞ்சு நடிகர் மெஹ்டி நெப்போ, ப்ரியா ஆனந்த், அடில் ஹீசைன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

0 comments: