நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஜெயம் ராஜா புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு குடும்ப பாங்கான கதையை உருவாக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்.
இப்படம் ரீமிக்ஸ் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ரீமிக்ஸ் படம் இயக்குவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் கதாநாயகனாக நடிகர் கார்த்தி நடிக்கிறார்.
தற்போது கார்த்தி ”அலெக்ஸ் பாண்டியன்” படத்தில் பிசியாக நடித்து கொண்டுள்ளார். மேலும் கார்த்தி நடித்த 'சகுனி' ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கிறார். இப்படங்களை முடித்து விட்டு, கார்த்தி இயக்குனர் ஜெயம் ராஜாவுடன் இணைவார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: