• அர்ஜுன் நடிப்பில் காட்டுப்புலி படம்



    அடர்ந்த காட்டிற்குள் நடக்கும் அநியாயங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வரும், துடிப்பான நாயகனாக காட்டுப்புலி படத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.

    கொலிவுட்டில் நாயகன் அர்ஜுன் நடிப்பில் காட்டுப்புலி திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    காட்டுப்புலி திரைப்படத்தை அடர்ந்த காட்டுக்குள் படமாக்கியிருக்கிறார்கள்.

    நாயகன் அர்ஜுன் தனது மனைவி பிரியங்கா தேசாய், மகள் தன்யாவுடன் சுற்றுலாவிற்காக, அடர்ந்த காட்டிற்குள் நுழைகிறார். அங்கே, துடிப்பான இரண்டு காதல் ஜோடிகளை சந்திக்கிறார்.

    இந்நிலையில் காட்டில் நுழைந்தவர்களின் மனித உறுப்புகளை வேட்டையாடும் வில்லன் டினு வர்மாவிடத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

    அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை இயக்குனர் பரபரப்பாக சொல்ல முயற்சித்துள்ளார்.

    பல்வேறு சோதனைகளை சந்தித்து, காட்டில் நடக்கும் சட்ட விரோத செயல்களை நாயகன் அர்ஜுன் வெளியுலகிற்கு அம்பலப்படுத்துகிறார்.

    திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் அதிரடி சண்டையில் இறங்கி தன்னுடைய பலத்தை அர்ஜுன் காட்டுகிறார்.

    ராஜேந்திர பிரசாத்தின் ஒளிப்பதிவு, விஜய் வர்மாவின் இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. படத்தை இயக்கி, நடித்ததோடு சண்டை பயிற்சியாளராகவும் டினு வர்மா பணியாற்றியுள்ளார்.

    காட்டுப்புலி என்ற விறுவிறுப்பான ஓக்ஸன் திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment