• விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஸ்ருதிக்கு பிரதமர் அழைப்பு


    பிரதமர் மன்மோகன்சிங், நாயகி ஸ்ருதிஹாசனை தன்னுடைய விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


    கொலிவுட்டில் 3 திரைப்படத்தில் நாயகன் தனுஷ் பாடிய கொலைவெறி பாடலை பாராட்டி பிரதமர் மன்மோகன் சிங் தனுசுக்கு விருந்தளித்தார்.

    அதேபோல் 3 திரைப்படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனையும் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    மொரீசியஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலத் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீடு அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் வீட்டில் விருந்தளிக்க உள்ளார்.

    இவ்விருந்தில் கலந்து கொள்ளும் படி நாயகி ஸ்ருதிஹாசனுக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு அனுப்பியுள்ளது.

    இதுகுறித்து நாயகி ஸ்ருதிஹாசன் கூறியதாவது, பிரதமர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருந்தை வாழ்நாளில் எனக்கு கிடைத்துள்ள கௌரவமாக கருதுகிறேன்.

    இளம்வயதில் இதுபோன்ற வாய்ப்புகள் அமைவதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment