• பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!



    பெங்களூர்: பிரபல சினிமா தயாரிப்பாளரும் தொழிலதிபருமான அசோக் கெனியை நேற்று சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கெனி தயாரித்துள்ள புதிய படமான பிரசாத் வெற்றி பெற வாழ்த்துக் கூறினார் ரஜினி.


    உடல் நலம் பெற்ற பிறகு தனது நெருங்கிய நண்பர்களைத் தேடிச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

    அதன் படி நேற்று வெள்ளிக்கிழமை பெங்களூர் சென்ற ரஜினி, தயாரிப்பாளரும் தொழிலதிபருமான தனது நண்பர் அசோக் கெனியைச் சந்தித்தார்.

    அசோக் கெனியின் ஏகேகே எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள 'பிரசாத்' படம் (ஹீரோ அர்ஜுன்) பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

    இதைப் பாராட்டும் விதமாக அவருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி. ரஜினியை நலம் விசாரித்தார் அசோக் கெனி. இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

0 comments:

Post a Comment