சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' படத்திற்குப் பிறகு வெளியாக இருக்கும் படம் 'மாற்றான்'.
சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர் மற்றும் பலர் நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இயக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
சூர்யா - கே.வி.ஆனந்த இணைந்த 'அயன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு, கே.வி.ஆனந்த இயக்கிய 'கோ' படத்தின் வசூல் உள்ளிட்டவை 'மாற்றான்' படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன.
இப்படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து, படத்தின் உரிமையை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிடுவது என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
சூர்யா இப்படத்தில் ஐந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இப்படம் ஒரு ESPIONAGE த்ரில்லர். ரஷ்யா, செர்பியா, அல்பேனியா உள்ளிட்ட பல நாடுகளில் இப்படத்தினை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பினை பெரும் விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். தெலுங்கு பதிப்பிற்கு DUPLICATE என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
மே மாதம் இறுதியில் அல்லது ஜுன் மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர மும்முரமாக செயலாற்றி வருகிறது படக்குழு
0 comments: