• கோச்சடையானுக்கு பிறகு பாலிவுட் படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படத்துக்கு பிறகு பாலிவுட் படத்தை இயக்க கே.எஸ்.ரவிக்குமார் முடிவெடுத்துள்ளார்.


    கொலிவுட்டில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி, வெற்றிப்பெற்ற சாமி திரைப்படத்தை பாலிவுட்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக தகவல் பரவியுள்ளது.

    இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார், இந்தியில் சாமி படத்தை அப்படியே எடுக்கவில்லை. இது முற்றிலும் வித்தியாசமான படைப்பாக அமையும்.

    இதில் சஞ்சய் நாயகனாக நடிக்கிறார். அமிதாப் பச்சனை மனதில் வைத்து முக்கியமான கதாப்பாத்திரத்தை உருவாக்கியுள்ளேன். இதை ரஜினியிடம் கூறியபோது அவர், என்னை பாராட்டி தட்டிக்கொடுத்தார்.

    இதுகுறித்து அமிதாப்பிடமும் பேசிவருகிறோம். மேலும் பாலிவுட்டில் உருவாகும் சாமியில் நடிக்க பொருத்தமான நாயகியை தேடி வருகிறோம்.

    ரஜினியின் கோச்சடையான் நிறைவடைந்ததும் பாலிவுட்டில் சாமி திரைப்படத்திற்கான வேலையில் இறங்கிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment