நடிகை ரீமா சென்னுக்கும், டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான 'சிவ் கரண் சிங்' -க்கும் வருகிற மார்ச் 11 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து நடிகை ரீமாசென்னுக்கு, அவரின் வருங்கால காதல் கணவர் விலையுயர்ந்த பி.எம்.டபிள்யு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
காதலர் தினத்தன்று ரீமாசென்னை டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் காதலர். இந்த அழைப்பை ஏற்று ரீமாசென் டெல்லி விமான நிலையத்தில் இறங்கியபோது, அவரை ஆச்சர்யமூட்டும் வகையில் புதிய பி.எம்.டபிள்யு கார் பிங்க் நிற பலூன்கள் அலங்காரத்துடன் அவரை வரவேற்றது.
இந்த காரை 'சிவ் கரண் சிங்' காதலர் தினப்பரிசாக வழங்கி ரீமா சென்னை மகிழ்ச்சியடைய செய்தார். தற்போது ரீமா இந்த காரில் சென்று தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தனது திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். இவர்களது திருமண நிகழ்ச்சி மெஹந்தி விழா, சங்கீத் நிகழ்ச்சி, திருமணம் மற்றும் வரவேற்பு என 4 நாள் கொண்டாட்டமாக நடக்கவிருக்கிறது.

0 comments: