”வெயில்” பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி, பசுபதி, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள “அரவான்” படம் நேற்று (02-03-12) ரிலீஸாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் குறித்து வசந்தபாலன் கூறியதாவது :
இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் பரபரப்பாக பேசப்படுகிறது. அதில் முக்கியமான தாக, இரண்டரை நிமிட காட்சிக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். இக்காட்சி 6 மாதங்களாக எடுக்கப்பட்டது. ஆயிரம் மாடுகளுக்கு நடுவே கட்டிபோடப்பட்டிருக்கும் பசுபதியை, ஆதி எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை தத்ரூபமாக எடுத்துள்ளோம். ஆயிரம் மாடுகளை ஒரே இடத்தில் அடைப்பது ரொம்ப கஷ்டம். இதற்காக ‘3டி டிஜிட்டல் ப்யூஷன்’ என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால் படத்தில் இக்காட்சியை பார்க்கும்போது கிராபிக்ஸ் பயன்படுத்தியிருப்பது தெரியாது.
மேலும், 30 டெக்னீஷியன்கள் 6 மாதங்கள் உழைத்து இக்காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். ஆதி, பசுபதியை பல கோணங்களில் , ஆயிரம் போட்டோக்களுக்கு மேல் எடுத்தோம். இக்காட்சி கண்டிப்பாக மக்களிடையே பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments: