செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாம் உலகம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20ம் தேதி கோவாவில் துவங்க உள்ளது.
ஆர்யா-அனுஷ்கா நடிக்கும் இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக உருவாக்கும் முயற்சியில் செல்வராகவன் இறங்கியுள்ளார். அதற்காக கதை, திரைக்கதை என அனைத்தையும் மிகத் தீவிரமாக கவனித்து வருகிறார்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்தால் நிச்சயம் பாடல்கள் சூப்பர் ஹிட் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்ததே.
இப்படத்தின் படப்பிடிப்பு பிரேசில் மற்றும் அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது. இதற்காக சிறந்த இடங்களை செல்வராகவன் தேடி வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளது. அடுத்தபடியாக செல்வராகவன் திட்டமிட்டுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறது படக்குழு

0 comments: