தனுஷ், ஸ்ருதி நடிக்கும் 3 படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸாகும் என செய்தி வெளியானது. பின்னர் அந்த தேதியும் இல்லை மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்ட படம் 3.
ரஜினி 3 படத்தின் கிளைமேக்ஸை மாற்றச் சொன்னார் என்று வெளியான செய்தி தான் ஹைலைட்இப்போது 3 படத்தின் கதை வெளியாகியுள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மூன்று பருவத்தில் வெளிப்படும் காதலையும், ஒவ்வொரு பருவத்திலும் அது மாறுபடும்விதத்தையும் ஐஷ்வர்யா படமாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கு முன் தனுஷ், ஐஷ்வர்யா, அனிருத் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் படத்தில் இணைவதால் 3 என்று டைட்டில் வைத்ததாகவும் பேசப்பட்டது. டிரெய்லரில் வரும் பள்ளிப் பருவ தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தை நினைவு படுத்துகிறார். பாடல்கள் ஹிட்டாகிவிட்டதால் படமும் ஹிட்டானால் நல்ல வசூல் தான்.
ஆனால் படம் ரிலீஸாக வேண்டுமே. ‘3’ என்ற பெயர் வைத்ததாலோ என்னவோ மூன்று மாதமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ”ஒய் திஸ் கொலவெறி கொலவெறி ’3’

0 comments: