• செல்வராகவனுக்காக 6 பேக்ஸ் வைக்கும் ஆர்யா



    வழக்கமாக ஆர்யாவுக்கு பெண் நண்பர்கள்தான் முன்பு அதிகம் இருப்பார்கள். இப்போதெல்லாம் ஆண்களும் கூட நிறைய நண்பர்களாக உள்ளனர். சமீப காலமாக ஆர்யா தன்து நண்பர்களிடம் செல்வராகவனின் புகழ்பாடி வருகிறாராம்.


    நடிகர் ஆர்யா காட்டில் சோ என்று வாய்ப்பு மழை பெய்து வருகிறது. கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அவர் தற்போது செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் முதன்முதலாக அனுஷ்காவுடன் நடித்து வருகிறார். தன்னை சந்திக்க வரும் நண்பர்களிடம் எல்லாம் செல்வராகவன் என்னம்மா டைரக்ட் பண்றார் தெரியுமா என்று ஒரே செல்வராகவன் புகழ்பாடி வருகிறார்.

    மேலும் இரண்டாம் உலகம் செல்வராகவனின் கனவுப் படம். இதில் நடிப்பதன் மூலம் தனது நடிப்புத் திறமை மெருகேரும் என்கிறார் ஆர்யா. ஏற்கனவே கட்டுமஸ்தான உடல் வைத்துள்ள அவரை இந்த படத்திற்காக 6 பேக்ஸ் வைக்கச் சொல்லியிருக்கிறார் செல்வராகவன். அதனால் தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார் நாயகன்.

    ஒஸ்தி படத்திற்காக சிம்பு 6 பேக்ஸ் வைத்தார். தற்போது செல்வராகவனுக்காக ஆர்யா சிக்ஸ் பேக்ஸ் வைக்கிறார்.

    ராஜபாட்டையை தயாரித்த பிவிபி சினிமாஸ் தான் இரண்டாம் உலகத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment