• கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்லும் விஸ்வரூபம்



    உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப, கமல் திட்டமிட்டுள்ளார்.


    கொலிவுட்டில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் படங்கள் குறித்து ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய தகவல்கள் உலா வருவது வழக்கம்.



    தற்போது கமல்ஹாசன் இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் குறித்தும் கொலிவுட்டில் புதியதொரு தகவல் வெளியாகியுள்ளன.


    விஸ்வரூபம் திரைப்படத்தை நேரடியாக கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு கமல் அனுப்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது


    படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் வரை வந்துவிட்ட கமல், அடுத்த ஒரு மாதத்திற்குள் படத்தை முடித்து கேன்ஸ் விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.


    இதுகுறித்து கமல் கூறுகையில், இந்தப் படத்தை கேன்ஸுக்கு அனுப்புவதும் என் நோக்கம் தான். ஆனால் இப்போதே அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை.


    குறித்த காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பது தான் இப்போதைய என்னுடைய நோக்கம்.


    கேன்ஸ் பட விழா ஏற்பாட்டாளர் கிறிஸ்டியன் ஜீனுடன் தொடர்பில் இருக்கிறேன். வருகிற மார்ச் 15க்குள் படம் தொடர்பான பணிகள் முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.


    போட்டிப் பிரிவிலேயே விஸ்வரூபத்தைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளேன். அதற்கேற்ப கேன்ஸ் விழாக் குழுவினர் ஓரிரு நாட்கள் திகதிகளை மாற்றிக் கொள்வதாகக் கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.


    ஒருவேளை விஸ்வரூபம் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டால், சர்வதேச போட்டிப் பிரிவில் நேரடியாகப் பங்கேற்கும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கிடைக்கும்.


0 comments:

Post a Comment