ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்பு நாயகன் உதயநிதி, கௌதம் மேனன் படத்தில் நடிக்கிறார்.
கொலிவுட்டில் ராஜேஷ் இயக்கியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதி நாயகனாக ஹன்ஷிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
விரைவில் இப்படம் திரைக்கு வரஉள்ளது. படத்தில் நாயகி ஹன்ஷிகா உடன் இணைந்து நடித்தது பற்றியும், அடுத்து கெளதம் மேனனின் இயக்கத்தில் படம் பண்ணுவது பற்றியும் உதயநிதி பேசியுள்ளார்.
படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். நாயகி ஹன்ஷிகா உடன் இணைந்து காதல் காட்சிகளில் நடிக்கும்போது பதட்டமாக இருந்தது.
சினிமாவில் எனக்கு சீனியரான ஹன்ஷிகா மொழியே தெரியாமல் இதில் நன்றாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு சவாலாக இருந்தது.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகனாக நடித்த பிறகு, படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வருகின்றன.
கெளதம் மேனனோடு இணைந்து படம் பண்ண தயாராக உள்ளேன் என்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பட நாயகன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
0 comments: