தமிழ் திரையுலகில் ‘சின்ன குஷ்பு’ என்று வர்ணிக்கப்படுவர் ஹன்சிகா. ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தனது நீண்ட நாள் கனவை விரைவில் நனவாக்க இருக்கிறார் ஹன்சிகா. சின்ன வயதில் இருந்தே ஓவியம் வரையும் பழக்கம் உடையவராம் ஹன்சிகா.
இதுவரை சுமார் 100 ஓவியங்கள் வரைந்து வைத்து இருக்கிறார். அவரது ஓவியங்கள் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கின்றன. விரைவில் தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஹன்சிகா. ஓவியங்களை விற்று வரும் பணத்தினை கொண்டு முதியோர் இல்லம் கட்ட திட்டமிட்டு இருக்கிறார் ஹன்சிகா. ஏற்கனவே வருஷா வருஷம் தன்னுடைய பிறந்த நாள் அன்று ஒரு குழந்தைய ஹன்சிகா தத்தெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: