• திமிர் பிடித்தவள் இல்லை: ஹன்சிகா



    ஹன்சிகா வேலாயுதம் படத்தில் நடித்து அது வெற்றி பெற்ற பிறகு கோலிவுட்டின் கனவுக் கன்னியாக திகழ்கிறார் என்கிறது சிங்கப்பூரில் இயங்கும் விருது நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பு.


    தமிழர்களின் கனவுக் கன்னியாக இருப்பது குறித்து எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்டால், "நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது ஒரு சுமைதான். அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்".

    "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் தயாரிப்பு நிறுவனம் முதல் கொரியோகிராபர் வரை அனைவருமே சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் சந்தோஷம் அடைகிறேன்" என்கிறார்.

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன என்றால், "அதில் நான் திமிர் பிடித்தவள் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். உண்மையில் என் குணத்திற்கும் அதற்கும் ஒற்றுமையே இல்லை. நான் திமிர் பிடித்தவள் இல்லை" என்கிறார் ஹன்சிகா.

    இந்த படத்தை அடுத்து சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஹரியின் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

    வாழ்த்துகள் கனவுக் கன்னியே...

0 comments:

Post a Comment