• ஆர்யா விருந்தில் திரையுலக நட்சத்திரங்கள்



    தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகர்களில் ஒருவரான ஆர்யா, தனது நண்பர்களுக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
    ஆர்யா தான் வாங்கியிருக்கும் புதிய வீட்டிற்காக விருந்து வைத்தார் என்று தகவல் வெளியானது.

    ஆனால், அந்த வீட்டை வாங்கி ஆறு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த விருந்து குறித்து ஐயப்பாடு இருந்து வந்தது.


    தற்போது இந்த ஐயப்பாடு தெளிவாகியுள்ளது. அதாவது CCLல் சென்னை ரைனோஸ் அணி கோப்பையை வென்றது.

    இதற்காக நாயகன் ஆர்யா, தன் நண்பர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

    இந்த விருந்தில் சென்னை ரைனோஸ் அணியினர், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, த்ரிஷா, விஷால், ஜீவா, அமலா பால், இயக்குனர் ராஜேஷ், நிரவ் ஷா, விஷ்ணுவர்தன், அனுவர்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ் திரையுலக விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன்தாரா, முதன் முறையாக இவ்விருந்தில் கலந்து கொண்டதே சிறப்பம்சம் ஆகும்.

0 comments:

Post a Comment