வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்த “மங்காத்தா” படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் “மங்காத்தாவிற்கு” பல விருதுகள் கிடைத்துள்ளன.
மார்ச் 3 ஆம் தேதியன்று தேசிய தமிழ் திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில் பல துறைகளில் விருதுகளை வென்றுள்ளது “மங்காத்தா” படம்.
இப்படம் சிறந்த படம்(மங்காத்தா), சிறந்த இயக்குனர்(வெங்கட் பிரபு), சிறந்த ஒளிப்பதிவாளர்(ஷக்தி சரவணன்), சிறந்த துணை நடிகர்(பிரேம்ஜி), சிறந்த பெண் பாடகர்(சுசித்ரா) ஆகிய ஐந்து துறைகளில் விருதுகளை வென்றுள்ளது. இந்த வரிசையில் சிம்பு, ஜெய் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், லஷ்மி ராய், ஆண்ட்ரியா, அஞ்சலி, அர்ஜீன், மகத், பிரேம்ஜி, வைபவ், அஷ்வின் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

0 comments: