ரசிகர் மன்றம் தொடங்க நடிகை ஹன்சிகா ஆலோசித்து வருகிறார். மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் அவருக்கு, சமீபத்தில் சிங்கப்பூரில் கனவு கன்னி விருது வழங்கப்பட்டது. இந்த விருது பற்றி ஹன்சிகா அளித்துள்ள பேட்டியொன்றில், தமிழ் ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இது எனது முதல் சர்வதேச விருது ஆகும். தமிழ் படங்களில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் இருப்பதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனக்கு ரசிகர்மன்றம் தொடங்க நிறைய ரசிகர்கள் ஆர்வப்படுகின்றனர். என்னிடம் அதற்காக அனுமதி கேட்டு வருகின்றனர். எனது நல விரும்பிகளிடம் இதுகுறித்து ஆலோசித்து வருகிறேன். ரசிகர் மன்றம் தொடங்குவது பற்றி விரைவில் முடிவு அறிவிப்பேன், என்றார்.

0 comments: