• நில மோசடி புகாரை மறுக்கும் ஜெனிலியா



    தனக்கும், ரூ.250 கோடி நில மோசடி புகாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நடிகை ஜெனிலியா கூறியுள்ளார்.
    ஐதராபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று 250 கோடி ரூபாய் அளவுக்கு நிலமோசடி செய்து விட்டதாக திருப்பதையா என்பவர் ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


    மேலும் அந்நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதுடன் நிலத்தை வாங்கச் சொல்லி விளம்பரம் செய்த ஜெனிலியா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.

    இதனையடுத்து ஜெனிலியா மற்றும் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஜெனிலியா தரப்பில் அவரது உதவியாளர் பேசும் போது, எந்தவொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் ஜெனிலியா இயக்குனராக இல்லை. 6 வருடத்துக்கு முன்பு ஒரு நிறுவனம் தனது நிறுவன விளம்பரத்துக்காக புகைப்படத்திற்கு ஜெனிலியா போஸ் கொடுக்க வேண்டும் என்ற கேட்டனர்.

    அதை ஏற்றுக்கொண்டு போஸ் கொடுத்தார். மற்ற சில நிறுவனங்களுக்கும் ஜெனிலியா இதுபோல் விளம்பரம் செய்திருக்கிறார். அதுபோல் இதுவும் ஒரு நிறுவனம் என்ற வகையில் தான் போஸ் கொடுத்தார்.

    அதற்கு பிறகு நிறுவனம் சம்பந்தப்பட்ட நபர்கள் யாரையும் ஜெனிலியா சந்திக்கவில்லை. ஜெனிலியாவுக்கு ஐதராபாத்தில் சொத்து எதுவும் கிடையாது.

    மும்பையில் தான் வீடு இருக்கிறது. முதலீடுகள் அங்கு தான் இருக்கிறது. ஐதராபாத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. இந்த நில விவகாரத்தில் அவருக்கு தொடர்பில்லை என்றார்.

0 comments:

Post a Comment