அமர்க்களம் மற்றும் தீனா போன்ற படங்களில் மிக யதார்த்தமாகவும், நாட்டுப்புற இளைஞனாகவும் நடித்த நடிகர் அஜித்தின் கதாபாத்திரங்களை யாராலும் மறக்க முடியாது.
ஆனால் பில்லா படத்திற்கு பின்னர், தன்னுடைய நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்ட நடிகர் அஜித், எப்போதும் நவநாகரீக இளைஞராக உலாவந்தார். இது அவருடைய இரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
தற்போது பில்லா 2 படத்திற்கு பின்னர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாக்கியுள்ளார் நடிகர் அஜித். இப்படத்தில் 90 காலகட்டத்தில் வாழ்ந்த இளைஞனாக நடிக்கவுள்ளார் இதனால், நவநாகரீக நடை உடை பாவனைகளை மாற்றியுள்ளார் நடிகர் அஜித்.
இப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிகர் அஜித்தின் தோற்றத்தை தன்னுடைய முந்தைய படங்களான பாட்டியல்,அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களில் வாழ்ந்த கதாபாத்திரங்களை போல முழுவதுமாக மாற்றியமைப்பதில் மிக தீவிரமாக உள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.

0 comments: