• நம்பர் ஒன் இடத்திலிருப்பது மிக முக்கியம்: பிரியங்கா சோப்ரா



    திரைப்படத் துறையில் நம்பர் ஒன் இடத்திலிருப்பது மிக முக்கியம் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
    இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவோ, வேறு எந்த தொழிலோ நம்பர் ஒன் இடத்தில் இருப்பது மிக முக்கியம்.

    பள்ளி பருவத்திலிருந்தே இந்த போட்டி தொடங்கி விடுகிறது. இது மக்கள் மத்தியில் முத்திரை பதித்துவிடாது என்பது வேறு விஷயம்.


    ஆனாலும் நம்பர் ஒன் என்பது அவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் ஒன்று உறுதி நெம்பர் ஒன் அல்லது நம்பர் 2 யார் என்பதை நிர்ணயிப்பது கடினம்.

    யாராலும் நம்பர் ஒன் யார் என்பதை முடிவு செய்ய முடியாது. ஒரு கதாநாயகி வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் தான் நடிக்க முடிகிறது. எல்லா படமும் ஹிட்டாகி விடுவதில்லை.

    ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் தயாராகின்றன. கதாநாயகி என்றால் போட்டோவுக்கு ஏற்ற முகவெட்டு இருப்பது அவசியம்.

    இந்தியில் ரேகா, கேத்ரினா, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகியோர் போட்டோவுக்கு ஏற்ற அழகான முகவெட்டு கொண்டவர்கள் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment