கந்தா:
வி.பி. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான “கந்தா” படத்தில் கரண் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ”காவலன்” மித்ரா நடித்துள்ளார்.
ஆசிரியர் மாணவன் உறவை மையமாகக் கொண்டு எடுத்துள்ளார் இயக்குனர் திருவாரூர் பாபு (எ) கே. விஸ்வநாத். தயாரிப்பாளர் சம்பத்தப்பட்ட காரணத்தால், சமீபத்தில் இப்படத்தை வெளியிட, சென்னை சிவில் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை தற்போது தகர்த்தப்பட்ட நிலையில் இன்று ரிலீஸாகியுள்ளது.
நந்தா நந்திதா :
வன்முறையும், காதலும் என்றுமே ஒன்று சேராது, உண்மை காதல் ஒரு போதும் தோற்காது - இதுதான் நந்தா நந்திதா படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. புதுமுக இயக்குநர் ராம் சிவா இயக்கத்தில் ஹேமச்சந்திரன், மேக்னா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் இப்படத்தில், ஹேமச்சந்திரன் – மேக்னாராஜ் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பரிமாறிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி :
71 புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தை, சேரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஷண்முகராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த புமுகங்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்து, முழுக் காட்சிகளையும் முதலில் ஒரு ஹேண்டி கேமிராவில் பதிவு செய்து படமாக்கி, பின்னர் அதை வைத்துக் கொண்டு, சினிமாவுக்கென்று ஒரு ஷூட்டிங் நடத்தினார் இயக்குனர். சமீபத்தில் படத்தின் விளம்பத்திற்காக 50 காதல் ஜோடிகளை தெரிவு செய்து, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியை திரையிட்டுக் காட்டியுள்ளனர்.
காதல் பிசாசே :
ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் அரவிந்த் ரத்தின சிவலிங்கம், ரவி குணசிங்கம் தயாரிக்கும் படம் காதல் பிசாசே. இப்படத்தின் நாயகனாக நடித்திருப்பதுடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுள்ளார் அரவிந்த். இவருக்கு ஜோடியாக மிதுனா, அனிதா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கூடவே சந்தானம், கூல் சுரேஷ், சந்தானபாரதி, கொட்டாச்சி, வனிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆயுதமேந்தும் கல்லூரி மாணவனின் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

0 comments: