தெலுங்கு பட இயக்குனர் குண சேகர் இயக்கத்தில் உருவாகும் “பீரியட்” படத்தில் நடிப்பதற்காக அனுஷ்கா, நயன்தாரா இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வந்துள்ளன.
தென்னிந்தியாவில் புகழ்பெற்றவர், ஆந்திராவில் ஆட்சி புரிந்தவர் என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர் ராணி ருத்ரமா தேவி. இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் இயக்குனர் குண சேகர். இவரது வீர , தீர செயல்களை பின்னணியாகக் கொண்டு ”பீரியட்” படம் உருவாகிறது.
இதில் நடிப்பதற்கு நடிகை அனுஷ்காவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழில் விக்ரமுடன் தாண்டவம், சூர்யாவுடன் சிங்கம் 2, கார்த்தியுடன் சுராஜ் இயக்கும் புதிய படம் என படு பிஸியாக இருக்கிறார். இருந்தாலும் ராணி ருத்ரமா தேவி கதையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதால் கால்ஷீட் பிரச்சனையை சமாளித்து தேதியை குறிப்பிடுகிறேன் என்று அனுஷ்கா கூறினார்.
இந்நிலையில் நயன்தாரா தயாரிப்பு நிறுவனத்திடம் தான் அந்த வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து என்று ரகசிய தூது அனுப்பியுள்ளார். இதனால் அதிருப்தியில் இருக்கிறார் அனுஷ்கா. இதனால் இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.
அருந்ததி வேடத்தில் அனுஷ்காவும், சீதை வேடத்தில் நயன்தாராவும் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். என்வே யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாக தெரிகிறது.

0 comments: