• எஸ்.ஜே.சூர்யா படத்தில் லட்சுமிராய்!



    கவர்ச்சி நடிகை லட்சுமிராய் நடித்த ‘காஞ்சனா’ மிகப் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து புதிய படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதும், தன் கதாபாத்திரம் சரியில்லை என்ற காரணத்திற்காக சில படங்களை நிராகரித்து விட்டார்.


    இதை தொடர்ந்து டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார் லட்சுமிராய். வாலி, குஷி, நியூ போன்ற ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் ஷங்கரின் நண்பன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

    இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா ”இசை” என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கயுள்ளார். நடிப்பு மற்றும் டைரக்‌ஷன் பொறுப்பை ஏற்று வந்த எஸ்.ஜே.சூர்யா, முதன்முறையாக இப்படத்தின் இசையமைப்பு பொறுப்பையும் ஏற்று இருக்கிறார். இந்நிலையில் படத்திற்கு லட்சுமிராயை கதாநாயகியாக நடித்தால் நல்ல இருக்கும் என்று எண்ணி, அவரை ஹீரோயினாக முடிவு செய்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

0 comments:

Post a Comment