• ஹெலிகாப்டரில் சண்டை போட்ட கமலஹாசன்!



    உலக நாயகன் கமலஹாசன் தான் இயக்கி, நடிக்கும் “விஸ்வரூபம்” படத்திற்காக ஹெலிகாப்டரில் சண்டை போடும் காட்சியை பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் அமைத்தார்.

    மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ”விஸ்வரூபம்” கமலின் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக ‘லீ விட்டேக்கர்’ பணிபுரிகிறார். இவர் ’பேர்ல் ஹார்பர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். கோலிவுட் படங்களுக்கு பணிபுரிய பல வாய்ப்புகள் வந்தன. அப்போது மறுத்து வந்த ‘லீ விட்டேக்கர்’, தற்போது கமலின் ”விஸ்வரூபம்” படத்துக்கு அழைப்பு வந்தவுடனே ஒப்புக்கொண்டார்.

    இதில் சமீபத்தில் தீவிரவாதியாக நடிக்கும் ராகுல் போஸுடன் ஹெலிகாப்டரில் பறந்தபடி கமல்ஹாசன் சண்டைபோடும் காட்சி அமைக்கப்பட்டது. இதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் ‘லீ’ – யிடமிருந்து பயிற்சி பெற்று சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இக்காட்சியில் கமல் துணிச்சலுடன் ஹெலிகாப்டரில் ரோப் கட்டி பறந்தபடி நடித்து கொடுத்தார். இதை கண்டு வியந்த லீ கமலுக்கு கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment