• வெற்றிப் பாடல்கள் பற்றி 'நான்' பட நாயகன்



    பாடல்கள் அனைத்தும் அதற்கான இசையின் தரத்தை பொறுத்தே வெற்றி அடையும் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

    கொலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி “நான்” என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.


    திரைப்படத்தில் வெற்றி மற்றும் தோல்வியடையும் பாடல்கள் பற்றி தனது கருத்தைக் கூறியுள்ளார்.

    ஹிந்தி, தமிழ் பட இசை எல்லாமே தனிப்பட்ட திறமையை பொறுத்தது. கொலிவுட்டிலிருந்து ஒருவர் போய் பாலிவுட்டில் பெரிதாக செய்ய முடியும்.

    அதே போல அங்கிருந்து ஒருவர் வந்து இங்கும் சிறப்பாக செய்ய முடியும். இசை நன்றாக இருக்கும் போது மொழி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் ரசிக்கிறார்கள். நன்றாக இருந்தால் கேட்கிறார்கள்.

    இசை நன்றாக இல்லை என்றால் கேட்க மாட்டார்கள். ஆகவே, இசையமைப்பு என்பது பாடல்களின் தரத்தை பொறுத்தே வெற்றியடையும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment