• மதுக்கோப்பையுடன் போஸ் தரும் படத்தை வெளியிட்டதால் சமீரா ரெட்டி வழக்கு!


    “எண்ட் ஆப் குட் டைம்ஸ்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள, விஜய் மல்லையா தொடர்பான கட்டுரையில், கையில் மதுக்கோப்பையுடன் சமீரா ரெட்டி போஸ் தருவது போல படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சமீரா ரெட்டி அஜித்துடன் இணைந்து 'அசல்' படத்திலும், விஷாலுடன் 'வெடி' மற்றும் மாதவனுடன் 'வேட்டை' படத்திலும் நடித்துள்ளார்.

    தற்போது ஹிந்தி சினிமாவில் நடித்து கொண்டே இவர் தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார். இவர் திரையுலகில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து இவரை பற்றி கட்டுரைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதோடு இவரின் போட்டோவையும் விளம்பரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளா வாரபத்திரிகையொன்றில் வெளியான படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சமீரா மதுகோப்பையை கையில் ஏந்தியவாறு இருந்தது. இதை ஒரு பத்திரிக்கை மதுபான கம்பெனி நடத்தும் விமான சேவைக்காக வெளியிட்டுள்ளது. இதற்கு சமீரா ரெட்டி கண்டனம் தெரிவித்ததோடு வழக்கு பதிவு செய்ய அந்த பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment