தனுஷ் ஜோடியாக ‘3’ படத்தில் நடிக்கிறார் கமல் மகள் ஸ்ருதி ஹாசன். தெலுங்கில் கப்பார்சிங் படத்தில் நடித்து வருகிறார். ‘3’ படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.
சினிமா அனுபவங்கள் பற்றி ஸ்ருதி கூறியதாவது:-
சினிமாவில் திருப்தியே வரக்கூடாது. அப்படி வந்தால் முன்னேற முடியாது நான் கமல் மகளாக இருந்ததால் நடிகையாகும் அறிமுகம் எளிதாக கிடைத்தது. ஆனால் அது நிலையானது அல்ல. சினிமாவில் நீடிக்க திறமை வேண்டும். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்.
என்னை எல்லோரும் கமல் மகளாகவே பார்க்கிறார்கள் அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறேன். எனது தனித்து வத்தை பதிய வைக்க போராடுகிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் வித்தியாசமான கேரக்டர்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. பசி இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்.
தமிழில் நடிக்கும் 3 படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

0 comments: