• ஓகேஓகே பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யாவின் உரையாடல்



    “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் பாடல் சி.டி. மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நேற்று (மார்ச் 5) மாலை நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி பங்கேற்று பாடல் சி.டி மற்றும் டிரெயிலரை வெளியிட்டனர். விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:


    உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நன்றாக நடித்துள்ளார். அவருக்கு டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. “நேருக்கு நேர்” படத்தில் நடித்த போது எனக்கு ஆடவும் தெரியாது, சண்டை போடவும் தெரியாது இருந்தாலும், அதன் பிறகு என்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

    எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால் தான் முன்னுக்கு வர முடியும். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இவ்வாறு சூர்யா பேசினார்.

    விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, சிபிராஜ், உதய நிதி ஸ்டாலின், விஷ்ணு, சந்தானம், நாயகி ஹன்சிகா, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி, பேரரசு, ராஜேஷ், தயாரிப்பாளர் துரை தயாநிதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment