• ஷக்தியின் நடிப்பில் ''ஏதோ செய்தாய் என்னை'' காதல் ஒக்ஸன் படம்



    ஒளிப்பதிவாளர் பிரியன், கே.வி.குகன் இருவரிடமும் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் எழிலரசன் 'ஏதோ செய்தாய் என்னை' படத்தை தயாரித்துள்ளார்.
    இந்த காதல் படத்தில் இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தியும் 'பேராண்மை' லியாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.


    இவர்களுடன் ஆனந்த் பாபு, ஜான் விஜய், இளவரசு, ஸ்ரீநாத்,தேவிப்ரியா, மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    படத்தை தயாரிக்கும் எழிலரசன் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கணேஷ் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    படத்தை தொகுக்கும் பணியை முத்து லட்சுமி கவனிக்கிறார்.

    இயக்குனர் 'முகவரி' துரை, சுப்ரமணிய சிவா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய எல்வின், படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

    இதுகுறித்து எழிலரசன், இயக்குனர் எல்வின் சொன்ன கதை எனக்கு பிடித்ததால் படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன்.

    என் சொந்தப்படத்துக்கு நானே ஒளிப்பதிவாளர் ஆனேன். சூப்பர் 35 கமெராவில் வண்ணங்களையும் கோணங்களையும் படத்துக்காக வித்தியாசமான முறையில் பதிவு செய்துள்ளேன்.

    படத்தின் தயாரிப்பாளர் என்பதைவிட சிறந்த ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவுக்கு என்னை இப்படம் அடையாளம் காட்டும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment