நடிகர் சூர்யா, ராகவா லாரன்ஸ், கருணாஸ் மற்றும் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து சிறந்த சமூக சேவையை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவரும் சேர்ந்திருக்கிறார்.
வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் ஆதரவற்றோர் விடுதியை நடத்தி வருகிறார். இந்த விடுதியை மும்பையில் கடந்த 10 வருடங்களாக சத்தமே இல்லாமல் நடத்தி கொண்டுவருகிறார்.
வாய் பேச முடியாதவர்கள், காது கேட்காதவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் இந்த விடுதியில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவுகளை சினிமாவில் நடிப்பதன் மூலமும், நடன நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து நடத்தி வருகிறார்.

0 comments: