நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் பாடியுள்ளார்கள் என்று கௌதம் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் “நீ தானே என் பொன்வசந்தம்” படத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை கௌதம் மேனன் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார்.
கெளதம் மேனன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். முதன் முறையாக நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜாவோடு கூட்டணி அமைத்துள்ளார்.
சென்ற காதலர் தினத்தன்று இப்படத்தின் FIRST LOOK, YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள்.
தற்போது படத்தின் பாடல்களுக்கான பணிகளில் இசைஞானி ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் இசைக்காக இளையராஜா, ஹங்கேரி நாட்டிற்கு சென்று பதிவு செய்ய உள்ளார்.
இந்நிலையில் பாடல்கள் குறித்து கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில், நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் பாடியுள்ளார்கள்.
அதைப் பார்ப்பதே பெரும் ஆனந்தமாக இருந்தது. இளையராஜா தன் குரலில் ஒரு பாடல் பதிவு செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments: