சிம்புவும், நயன்தாராவும் திகதி இருந்தால் ஜோடியாக நடிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அறிவித்துள்ளனர்.
கொலிவுட்டில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர்.
நாயகி நயன்தாராவும், நாயகன் சிலம்பரசனும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு பிரிந்தனர்.
இதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்து சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.
இப்போது ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள்.
இப்போது சிலம்பரசன் நடிக்கும் வாலு என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்றும், தன்னிடம் சிலம்பரசன் நெருங்கி பழகக்கூடாது, கேரவனுக்குள் வந்து பேசக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்ததாக வெளியான தகவல் பரபரப்பான செய்தியாகிவிட்டது.
ஆனால் இதனை இருவருமே இப்போது மறுத்துள்ளனர். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், வாலு பட இயக்குநர் விஜய் அந்த படத்துக்காக என்னிடம் திகதி கேட்டது உண்மை.
ஆனால் நான் இப்போது 3 தெலுங்கு படங்களில் நடிப்பதால் இந்த படத்திற்கும் திகதி கொடுத்தால் குழப்பம் ஏற்படும் என்பதால் என்னால் திகதி கொடுக்க முடியவில்லை.
இது குறித்து வாலு படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் பேசவும் இல்லை நான் எந்த நிபந்தனையும் விதிக்கவும் இல்லை என்றார்.
மேலும் எனக்கு, சிம்புவுடன் எந்த பிரச்சினையும் கிடையாது. அவருடன் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னிடம் திகதி இருந்தால் மட்டுமே அவர் படத்தில் நடிப்பேன். இல்லையென்றால் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிம்பு கூறுகையில், நயன்தாராவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. வாலு படத்தில் நடிப்பதற்கு கேட்டபோது நயன்தாரா நிபந்தனைகள் விதித்ததாக வதந்தியை பரப்புகிறார்கள். மேலும் திகதி இருந்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments: