தனது காதலரை திருமணம் செய்து கொண்ட ஜெனிலியா, கொலிவுட்டிலிருந்து விலகி விட்டதாக திரையுலகம் கருதி வந்தது.
இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை பற்றியும் இனி திரைக்கு வருவது குறித்தும் ஜெனிலியா மனம் திறந்து பேசியுள்ளார்.
நானும் ரித்தீஷும் முதலில் நல்ல காதலர்கள். இப்போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட திருமண தம்பதிகள்.
எந்த விடயமானாலும் இருவரும் கலந்து, மனம் விட்டு பேசுவோம். கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம் என்று ஜெனிலியா கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ‘வேலாயுதம்’ பட வெற்றிக்கு பிறகு, நிறைய திரைக்கதைகளை படித்தேன்.
படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்க எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
திரையுலகின் தலைசிறந்த கலைஞர்களான கமல், ரஜினி இருவருடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு கிடைத்த பெரிய மரியாதையாக கருதுவேன்.
கொலிவுட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது. விரைவில் கொலிவுட் படத்தில் என்னை ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் ஜெனிலியா தெரிவித்துள்ளார்.
0 comments: