புதிய படங்களில் கமிட் ஆவதை தவிர்த்து வரும் த்ரிஷாவுக்கும், இரண்டாவது இன்னிங்க்ஸில் பிஸியாக இருக்கும் நயன்தாராவுக்கு முட்டல், மோதல், அப்படி இப்படின்னு சலசலக்கப்படுகிறது. பிரபுதேவா பார்ட்டிக்கு த்ரிஷா போனதும் இதற்குள்ளிருக்கும் அரசியலை கவனிங்க என்றும் அதிரடி கிளப்புகிறார்கள் சிலர்!!
த்ரிஷாவின் காதலராக கிசுகிசுக்கப்படுகிறார் பிரபல தெலுங்கு ஹீரோ ராணா. ஒரு நாள் இருவரும் சந்திக்கவில்லை என்றாலும் பிளைட் பிடித்து சென்னைக்கு வந்துவிடுகிறாராம். ஆனால் இதையெல்லாம் பிரண்ட்ஷிப்புதான் என்று பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இந்த ராணாவோடுதான் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நயன்தாரா.
ராணா மீது ரொம்பவே பொசஸிவாக இருக்கும் த்ரிஷா, நயன்தாராவை கடுப்பேற்றி வெறுப்பேற்றவே பிரபுதேவா பார்ட்டிக்கு போனதாக கொளுத்திப் போடுகிறது இந்த வம்பு மடம். ஒரு வேளை அப்படி இருக்குமோ? த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்குமே வெளிச்சம்!!

0 comments: