அழகாக காட்டுவது தான் கவர்ச்சி, அதில் தப்பு ஒன்றும் இல்லை என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் கலகலப்பு(மசாலா கபே). இது இவரது 25வது படமும் கூட. இப்படத்தின் நாயகன், நாயகியாக விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அஞ்சலியும், ஓவியாவும் ரொம்ப கவர்ச்சியாக நடித்துள்ளனர்.
அஞ்சலியும், ஓவியாவுமா…? இப்படி என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சி மழை பொழிந்துள்ளனர். இந்நிலையில் கலகலப்பு படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று நடந்தது.
ஆடியோ வெளியீட்டு விழாவில் கவர்ச்சியாக நடித்தது பற்றி அஞ்சலி பேசுகையில், கவர்ச்சி என்பது ஆரம்பகாலத்தில் இருந்தே இருக்கிறது. படத்தில் எனக்கு அழகான ரோல். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், அப்படி நடித்தேன். அதனால் ஒன்றும் தப்பு ஏதும் இல்லை. அழகாக காட்டுவது தான் கவர்ச்சி. கலகலப்பு படம் ரொம்ப கலகலப்பான, கலர்புல் படம் என்று கூறினார்.
0 comments: