இளைய தளபதி விஜய்யின் “யோஹன் அத்தியாயம் ஒன்று” படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு யோஹன் என்ற தலைப்பை தெரிவு செய்ததன் மூலம் கௌதம் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யோஹன் என்ற சொல்லுக்கு கௌதம் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, யோஹன் என்பது உலகம் முழுவதும் தெரிந்த பெயர். சர்வதேச அளவில் இப்படத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது என தெளிவாக விளக்கியுள்ளார்.
இளையதளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் “துப்பாக்கி” படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் கௌதம் “நீ தானே என் பொன் வசந்தம்” படப்பணிகளில் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் அவரவர் பட வேலைகளில் முடிவடைந்த பின்பு, யோஹன் படப்பணிகளில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments: