• எம்.ஜி.ஆராக மாறிய விஷால்



    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு எம்.ஜி.ஆர் என்று படக்குழுவினர் தலைப்பிட்டுருக்கிறார்கள்.
    “வெடி” படத்தினை அடுத்து விஷால் சமரன் திரைப்படத்தில் த்ரிஷாவோடு நடித்து வருகிறார்.

    இப்படத்தை “தீராத விளையாட்டு பிள்ளை” இயக்குனர் திரு இயக்குகிறார். தற்போது “சமரன்” என்ற தலைப்பினை “சமர்” என்று மாற்றி இருக்கிறார்கள்.


    இப்படத்தினைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    மூன்று வேடங்களில் விஷால் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு சுந்தர் சி. “MGR” (Madhan, Gaja, Raja) என்று தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்கள்.

    விஷால் இப்படத்தில் மதன், கஜா, ராஜா என்ற மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இத்தலைப்பினை பதிவு செய்து இருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளன.

    இப்படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்க இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு குத்து பாடலுக்கு சதா நடனமாட இருக்கிறார்.

    மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

0 comments:

Post a Comment