வழக்கமாக ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும்தான் இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பாட்டனி, ஜூவாலஜி எல்லாம் சூட் ஆகும். ஆனால் இயக்குநர் ராஜேஷுக்கும், காமெடியன் சந்தானத்துக்கும் கூட இது கரெக்டாகப் பொருந்தி வருகிறது போல. அதனால்தான் இருவரும் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இணைந்து பணியாற்றப் போகிறார்கள்.
இந்த இருவரும் முதன் முதலில் இணைந்த படம் சிவா மனசுல சக்தி. தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பட்டையைக் கிளப்பினர். அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடித்தார். தற்போது நான்காவது முறையாக இணையவுள்ளார்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பவர் கார்த்தி. படத்திற்குப் பெயர் அழகு ராஜா. ஏற்கனவே கார்த்தியுடன் சிறுத்தையில் பெடலெடுத்தவர்தான் சந்தானம். எனவே இந்த மூன்று பேரும் சேர்ந்து பணியாற்றவுள்ளதால் மறுபடியும் ஒரு காமெடி களியாட்டமாக இது அமையும் என்று நம்பலாம்.
ஆனால் படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லையாம், இன்னும் கொஞ்ச மாசமாகுமாம் ... ஆகட்டும், ஆகட்டும். படம் நல்லா வந்தா சரித்தான்..
0 comments: