• ஆர்யா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்…?



    சமீபத்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் விதமாக வித்தியாசமான தலைப்புள்ள படங்கள் அதிகளவில் வருகின்றன. அந்தவகையில், ஆர்யா நடிக்க இருக்கும் டில்லி-பெல்லி தமிழ் ரீ-மேக் படத்திற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியில் அமீர்கான் தயாரிப்பில், இம்ரான் கான் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் டில்லி பெல்லி.
    இப்படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. படத்தின் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். இன்னொரு முக்கிய ரோலில் அஞ்சலி பத்திரிக்கையாளராக நடிக்க உள்ளார். ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் படங்களின் டைரக்டர் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

    விரைவில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கையில், படத்திற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த டைட்டில் வின்னர் படத்தில் வடி‌வேலு நடித்தபோது அவர் வைத்திருந்த சங்கத்தின் பெயர் இதுவாகும். அதேசமயம் சேட்டை, வை ராஜா வை போன்ற தலைப்பு வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment