• கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டேனா? கோபத்தில் அமலா பால்



    பட உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக தகவல் பரவியதை அடுத்து அமலா பால் கோபத்தில் எரிந்து விழுந்துள்ளார்.
    தெலுங்கில் வெளியாகி, வெற்றி பெற்ற 'லவ் பெயிலியர்' படத்துக்கு அமலா பால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக கூறப்பட்டது.

    ஆனால் தமிழில் அமலாவுக்கு இருபது லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.


    இந்நிலையில் கொலிவுட்டை விட தெலுங்கு பட உலகம் அமலா பாலுக்கு பல மடங்கு சம்பளத்தை சேர்த்து வழங்குவதாக சொல்கிறார்கள்.

    தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் என் நடிப்புக்கு ஏற்ற சம்பளத்தை வழங்குகிறார்கள். கோடிக்கணக்கில் கேட்பதாக கூறுவதில் உண்மையில்லை.

    மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அவ்வளவாக தமிழ் படங்களில் நடிக்க முடியாமல் போனது.

    தமிழ்,தெலுங்கு இரு மொழிகளில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, நானி இரு நாயகர்கள் நடிக்கும் படத்தில் நடிக்கிறேன்.

    இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது என்று அமலா பால் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment