• பெண்களை இழிவுபடுத்தினேனா? சந்தானம் விளக்கம்



    திரைப்படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி சந்தானம் வசனம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    விமலும், சந்தானமும் இணைந்து நடிக்கும் இஷ்டம் படத்தின் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தானத்திடம் இது குறித்து கேட்கப்பட்டது.


    இதற்கு பதில் அளித்து சந்தானம் கூறியதாவது, பெண்களை இழிவுபடுத்துவது போல் நான் வசனம் பேசுவதாக விமர்சிப்பது தவறு.

    சினிமாவில்தான் அப்படி பேசுகிறேன். சப்பை பிகர், மொக்கை பிகர் தலையில் பேன் வச்சிருந்தாலும் கையில் போன் வைக்காமல் விடுவதில்லை என்றெல்லாம் நான் பேசிய வசனங்கள் படத்தில் வரும் கதாபாத்திரங்களை பற்றித்தான் இதை காமெடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நிஜத்தில் தெருவில் போகும் பெண்களை பற்றி அப்படி பேசவில்லை. பேசினால் சும்மாவிட மாட்டார்கள். டாஸ்மாக் சீன்களில் அதிகம் நடிப்பதாகவும் பேசுகின்றனர். அது உண்மை தான் டாஸ்மாக் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டது.

    சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒருவருக்கொருவர் அங்குதான் பரிமாறிக் கொள்கிறார்கள். புள்ளி விவரப்படி அரசுக்கு அதிக வருமானம் டாஸ்மாக்கில் இருந்து தான் வருகிறது.

    என்.எஸ். கிருஷ்ணன், தங்கவேலு, நாகேஷ், காலத்தில் இருந்து இன்று வரை சினிமாவில் ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்து விட்டனர். அதில் பத்து பேர் பெயர்கள் தான் ரசிகர்களுக்கு தெரியும்.

    அந்த பத்து பேரில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment