
இயக்குனர் ஷக்ரி டோலட்டியின் இயக்கத்தில் 'பில்லா-2' படம் தயாராகி வருகின்றது.
இப்படத்தில் நாயகன் அஜித்துடன் மாடல அழகிகள் ப்ருனா அப்துல்லா, பார்வதி ஓமனக்குட்டன் இருவரும் நடித்துள்ளார்கள்.
இந்தப்படத்தில் மாடல் அழகிகள் தங்களின் நடிப்புத்திறமையை வெகுவாக காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
பில்லா-2 படத்தில் ஜாஸ்மின் என்ற ரோலில் நாயகனின் வாழ்க்கையில் இணைந்த பெண்ணாக வருகிறேன்.
இந்த கேரக்டரைக் கேட்டதும் நடிக்க சம்மதித்தேன். தமிழ் மற்றும் இந்தியில் வெளியான பில்லா படங்களை ரசித்து பார்த்துள்ளேன் என்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.
நான் இந்தப்படத்தில் சமீரா என்ற வலுவான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தமிழ் மொழியில் நடிப்பது எனக்கு சவாலாக இருந்தது.
ஆரம்பத்தில் கஷ்டமாக தெரிந்தது,போக போக எளிதாக என்னால் படத்தில் நடிக்க முடிந்தது என ப்ருனா அப்துல்லா கூறியுள்ளார்.
படம் வெளியான பிறகு, ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று இப்போதே இரு அழகிகளும் யோசித்து வருவதாக பட வட்டாரம் கூறுகிறது.
0 comments: