• இனி விஜய் தலைவன் இல்லை



    இயக்குனர் ஏ.எல்.விஜய், இளையதளபதி விஜய்யை வைத்து ஒரு புதுப் படமொன்றை இயக்க இருக்கிறார்.

    திரையுலகில் முதன்முறையாக இவர்கள் இணையும் இப்படத்திற்கு 'தலைவன்' எனப் பெயரிடப்பட்டிருந்தது.


    ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குனர், விரைவில் 'தலைவன்' படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கு முன்பு விஜய் இயக்கிய 'தெய்வத்திருமகள்' படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என்றும் பின்னர் தெய்வமகன் என்றும் பெயர் மாற்றம் செய்தார்.

    கடைசியாக அவர் தெய்வத்திருமகள் என்ற தலைப்பில் படத்தை வெளியிட்டார்.

    இந்த சென்டிமெண்ட் காரணமாக 'தலைவன்' படத்தின் தலைப்பையும் இவர் மாற்றுகிறார் என்று இயக்குனரின் நெருக்கமான வட்டாரம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

    தற்போது இயக்குனர் விஜய் தாண்டவம் படப்பிடிப்பிலும் இளையதளபதி துப்பாக்கி படப்பிடிப்பிலும் பணியாற்றி வருகின்றனர்.

0 comments:

Post a Comment