பாலிவுட் வெற்றிப் படமான 'ஜாப் வி மெட்' படத்தை தமிழில் 'கண்டேன் காதலை' என்ற தலைப்பில் ரீமேக் படமாக உருவாக்கினார் இயக்குனர் கண்ணன்.
இப்போது யுடிவிக்காக 'டெல்லி பெல்லி' படத்தை தமிழில் ஆர்யா, ஹன்ஷிகா மொத்வானி, அஞ்சலி, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் 'சேட்டை' படமாக கண்ணன் எடுத்து வருகிறார்.
கண்டேன் காதலை படத்துக்கு நாயகன்-நாயகி மத்தியில் நெருக்கமான காட்சிகள் தேவைப்படவில்லை. ஆனால், இந்த சேட்டை படத்துக்கு ஆர்யா-அஞ்சலி கதாப்பாத்திரங்களின் நெருக்கத்தை காட்சிப்படுத்த வேண்டும்.
அடுத்த மாதம் மும்பையில் படப்பிடிப்பை நடத்த யோசித்துள்ளோம். நாயகன்- நாயகி நெருக்கமான காட்சியை கலைநயமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
என் படத்தை ரசிக்கும் எவரும் முகம் சுழிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். குழந்தை கூட என் படத்தை விரும்பி ரசிக்க வேண்டும் என்று நான் நினைப்பதால் ஆபாசத்துக்கு துளியும் இடம் கொடுக்க மாட்டேன்.
தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்காக நாகரீகமாக காட்சிகளை எடுப்பேன்.
ஆர்யா-ஹன்ஷிகா-அஞ்சலி இவர்களின் கெமிஸ்ட்ரி பற்றி ரசிகர்கள் இனி வரும் நாட்களில் பரபரப்பாக பேசுவார்கள். இந்தப்படத்தில் நாயகிகளோடு ஆர்யாவை பார்க்கிறவர்கள் 'மச்சக்கார நாயகன்' என்று சொல்வார்கள் என்று 'சேட்டை' பட இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார்.

0 comments: