
காமெடி நடிகர் விவேக் வில்லன் கேரக்டருக்கு மாறுகிறார். “வழிப்போக்கன்” என்ற படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தமிழில் இப்படத்தை அன்புசெழியனும், கன்னடத்தில் சிவசூர்யாவும் இயக்குகின்றனர். இதில் மிதுன், விவேக் இணைந்து நடிக்கின்றனர்.
விவேக் முதல் முறையாக இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து விவேக் அளித்த பேட்டி வருமாறு:-
“வழிப்போக்கன்” படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன் என்று பலரும் கேட்கின்றனர். வில்லனாக நடிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை. காமெடி, வில்லத்தனம் எல்லாவற்றையும் நடிப்பு என்ற கோணத்தில்தான் நான் அணுகுகிறேன்.
“வழிப்போக்கன்” படத்துக்கு வழக்கமான வில்லன்கள் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று என்னை தேர்வு செய்துள்ளனர். திரில்லர் படமாக இது தயாராகிறது. கிளைமாக்ஸ் வரை நான் வில்லன் என்று தெரியாது. பிளாஷ்பேக் மூலம்தான் அது தெரியவரும்.
சுந்தர்.சியுடன் முரட்டுக்காளை படத்தில் திருநங்கையாக நடித்ததை ரசிகர்கள் ரசிக்கிறார்கள். ஹரி இயக்கும் சிங்கம்-2, வி.சேகர் இயக்கும் சரவணப்பொய்கை, மற்றும் மச்சான், பத்தாயிரம் கோடி படங்களிலும் நடிக்கிறேன். பசுமை கலாம் திட்டம் மூலம் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அப்துல்கலாம் விருப்பப்படி ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கை விட்டு விட மாட்டேன்.
0 comments: